Friday, May 15, 2026

அமாவாசை

 உன்னை நினைவு படுத்தாத பாடலும் ஒரு பாடலா.. 

Instagram reelsகளை

வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! 

--

திடீரென்று ஒருநாள் போய் சேர்ந்துவிட்டால் telepathyயிலேயே தொடர்பில் இருக்கும் உனக்கு தெரிந்திருக்கும்  இருந்தாலும் இவனுக்கு தகவல் சொல்லிவிடு என்று மகனிடம் சொல்லிவிட்டேன். 

நீ முன்னாடி போய் சேர்ந்துட்டேனா எனக்கு எப்படி தெரியும்

Saturday, May 2, 2026

Wednesday, May 7, 2025

Change it!




Change it! Change it, if you don't like it. Modern love story Mumbai - Cutting chaiல  இது வருது. இவன கல்யானம் பன்னிக்காம, அவன பன்னியிருந்தா, வாழ்க எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பார்ப்பா. இரண்டு உலகத்துலயும் அவ எழுத நினைத்த புத்தகத்தை ஆரம்பிக்காமயே இருந்திருப்பா. ஏன்டி அப்போ உன் நினைப்பெல்லாம் சொம்பு மேல தானா..



ஈசியா சொல்லிடலாம். 

But, financial independence and social interactions are much more important than romance. இங்க இருக்க பிக்கல் பிடுங்கல்ல ரொமென்ஸா அப்படினானு வாழ்க்கை பழக்கி வச்சிடும். அந்த காலத்துல இருந்த bare minimumஆன மல்லிகப்பூ அல்வா கூட, இப்ப நடைமுறையில இருக்கானு தெரியல.  அப்புறம் வாழ்கையே unproductiveவா வீட்டு வேலையிலும், சோம்பேறித்தனத்துலும் ஓடிட்டு இருக்கும். இதில, இவனா இருந்தா என்ன வேற எவனா இருந்தா என்னன்ற ஞானம் உதிக்கும்.

இதுக்கெல்லாம் முடிவே இல்லையா?
போய் புருசன லவ் பன்னு அதான் அக்ஸப்டட் தீர்வு.. அது முடியலியா try to build physical strength. Live long enough. Any tide can bring in anything.



Tuesday, May 6, 2025

யார்ரா நீ

இல்ல இல்ல யார் நான் 
எதுவுமில்லையா?
Oh! just a date 
போடாங்க..

வாழ்விற்கும் மொத்தமான அடை மழையில் நனைந்துவிட்டேன். நினைத்து, நினைத்து அசை போட அவற்றுக்கு உயிரும், உணர்வும் கொடுத்து நீ பார்த்து பார்த்து செதுக்கிவிட்டாய். இன்னும், இன்னும் இன்னும் இறுதி மூச்சு வரை நீ வேண்டும். கூடவே இல்லனாலும் மன்டைக்குள்ள, போனுக்குள்ள எப்பவும் ஒடிட்டே தானே இருக்க..

Some relationships can never be gone!
Ghosting.. Blocking nothing will work.
They are born immortal; made immortal.

Wednesday, April 30, 2025

Sunshine

என் இனிய sunshine பாப்பா


A bit faster, என்றவுடன், அவள் அப்பாவோடு சேர்ந்து ஏற்ப்படும் ஒருங்கிணைவு.. அடடா அடடா

அடுத்த Sunshine


Act of kindness இதெல்லாம் விட, இறுதியில் வரும் Don't hold grudges என்ற சொல், மிகவும் நெகிழச் செய்தது. ஓரே வீட்டுக்குள் இருந்தாலும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மன்னிக்க, க்ரட்ஜ் இல்லாமல் இருக்க கைவரவில்லை

இப்போ என்னொட Sunshine
என் உயிரானவனுக்கு
நீ நிஜமா
கற்பனையா
என்னவாயினும்
நீ என் இருளா Sunshine

Tuesday, April 8, 2025

பொறாமையா? எனக்கா?..

பல நூற்றாண்டுகளுக்கு முன்.. உனக்கு என்ன மாதிரி பையன் வேண்டும்னு அம்மா கேட்டாங்க.  ஐடி மாப்பிள்ளை தான் வேனும். ஏன்னா அப்ப தான் நான் வேலைய கன்டினுயூ பன்ன முடியும்னு ஒரு கன்டிசன் போட்டு வச்சிருந்தேன். அம்மா அப்போது, துணி வியாபாரம் பன்னிட்டு இருந்ததாங்க. அவங்க கொள்முதல் பன்ற மொத்த வியாபார கடை ஓனர் அம்மாவோட நல்ல நட்போட இருந்தாங்க. இரண்டு பெரும் சொந்த கத, சோக கத பேசிகிட்டு,  இருவரின் அசாத்திய உழைப்பின் மீது நல்ல mutual respectல இருந்ததாங்க. ஒருநாள் நானும் அந்த கடைக்குப் போய் நைட்டி வாங்கியிருக்கேன்.

அதுக்கப்புறமாச்சு, பல வருசம். கரோணா மற்றும் வயோதிகம் காரணமா வியாபாரத்தை அம்மா விட்டாச்சு. இப்போ, பற்பல ஆண்டுகளுககுப் பின், மறுபடியும் அந்த கடைக்கு போன அம்மா, அதன் வளர்ச்சியை பார்த்து மிரண்டுடாங்க. போன் பன்னி, போத்திஸ்லாம் என்னத்துக்கு, நம்ம கடை பிரம்மாண்டமாய், மிக பிரம்மாண்டமாய் மாறிடுச்சு.
இரண்டு பையனுக்கு இரண்டு பெரிய கடை, லிப்டு, அவ்ளோ சரக்குனு ரொம்ப நல்லா இருக்குனு சொல்லிட்டு, அவங்க பையனுக்கு கூட உன்ன கேட்டாங்க. நீ தான் ஐடி மாப்பிள கேட்டியே அதான் வேண்டாம்னுட்டேன்னு சொல்லிட்டு, வேறென்ன பெருமூச்சு தான்..

அவங்க கடைக்கு போன நாளன்னைக்கி, அந்த அம்மாவோட கள்ளமில்லா சிரிப்பும் வாஞ்சையும் இன்னமும் ஞாபகம் இருக்கு.  அப்போ கேட்டிருந்தாளும், என் வேலை தான் முக்கியம்னு நோ தான் சொல்லியிருப்பேன்.ம்.. இருந்தாலும்..  நீ வந்தா போதும்;  வந்தா மட்டும் போதும்னு நினைச்சவங்கள தொரத்திட்டு, கடைசியா வாக்கப்பட்டது,
  infinite பொறாமை புடிச்ச, வஞ்சம் புடிச்ச மாமியாக்காரி கிட்ட.

மாமியார் அமைவதெல்லாம்...

Monday, April 7, 2025

அழகென்ற சொல்லுக்கு

வண்ணகளும், water color paperஉம் போதும், வரையும் ஆசையைத் தூண்ட.


மகனின் படைப்பு.