அதுக்கப்புறமாச்சு, பல வருசம். கரோணா மற்றும் வயோதிகம் காரணமா வியாபாரத்தை அம்மா விட்டாச்சு. இப்போ, பற்பல ஆண்டுகளுககுப் பின், மறுபடியும் அந்த கடைக்கு போன அம்மா, அதன் வளர்ச்சியை பார்த்து மிரண்டுடாங்க. போன் பன்னி, போத்திஸ்லாம் என்னத்துக்கு, நம்ம கடை பிரம்மாண்டமாய், மிக பிரம்மாண்டமாய் மாறிடுச்சு.
இரண்டு பையனுக்கு இரண்டு பெரிய கடை, லிப்டு, அவ்ளோ சரக்குனு ரொம்ப நல்லா இருக்குனு சொல்லிட்டு, அவங்க பையனுக்கு கூட உன்ன கேட்டாங்க. நீ தான் ஐடி மாப்பிள கேட்டியே அதான் வேண்டாம்னுட்டேன்னு சொல்லிட்டு, வேறென்ன பெருமூச்சு தான்..
அவங்க கடைக்கு போன நாளன்னைக்கி, அந்த அம்மாவோட கள்ளமில்லா சிரிப்பும் வாஞ்சையும் இன்னமும் ஞாபகம் இருக்கு. அப்போ கேட்டிருந்தாளும், என் வேலை தான் முக்கியம்னு நோ தான் சொல்லியிருப்பேன்.ம்.. இருந்தாலும்.. நீ வந்தா போதும்; வந்தா மட்டும் போதும்னு நினைச்சவங்கள தொரத்திட்டு, கடைசியா வாக்கப்பட்டது,
infinite பொறாமை புடிச்ச, வஞ்சம் புடிச்ச மாமியாக்காரி கிட்ட.
மாமியார் அமைவதெல்லாம்...
No comments:
Post a Comment