என் இனிய sunshine பாப்பா
A bit faster, என்றவுடன், அவள் அப்பாவோடு சேர்ந்து ஏற்ப்படும் ஒருங்கிணைவு.. அடடா அடடா
அடுத்த Sunshine
Act of kindness இதெல்லாம் விட, இறுதியில் வரும் Don't hold grudges என்ற சொல், மிகவும் நெகிழச் செய்தது. ஓரே வீட்டுக்குள் இருந்தாலும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மன்னிக்க, க்ரட்ஜ் இல்லாமல் இருக்க கைவரவில்லை
இப்போ என்னொட Sunshine
என் உயிரானவனுக்கு
நீ நிஜமா
கற்பனையா
என்னவாயினும்
நீ என் இருளா Sunshine
Wednesday, April 30, 2025
Tuesday, April 8, 2025
பொறாமையா? எனக்கா?..
பல நூற்றாண்டுகளுக்கு முன்.. உனக்கு என்ன மாதிரி பையன் வேண்டும்னு அம்மா கேட்டாங்க. ஐடி மாப்பிள்ளை தான் வேனும். ஏன்னா அப்ப தான் நான் வேலைய கன்டினுயூ பன்ன முடியும்னு ஒரு கன்டிசன் போட்டு வச்சிருந்தேன். அம்மா அப்போது, துணி வியாபாரம் பன்னிட்டு இருந்ததாங்க. அவங்க கொள்முதல் பன்ற மொத்த வியாபார கடை ஓனர் அம்மாவோட நல்ல நட்போட இருந்தாங்க. இரண்டு பெரும் சொந்த கத, சோக கத பேசிகிட்டு, இருவரின் அசாத்திய உழைப்பின் மீது நல்ல mutual respectல இருந்ததாங்க. ஒருநாள் நானும் அந்த கடைக்குப் போய் நைட்டி வாங்கியிருக்கேன்.
அதுக்கப்புறமாச்சு, பல வருசம். கரோணா மற்றும் வயோதிகம் காரணமா வியாபாரத்தை அம்மா விட்டாச்சு. இப்போ, பற்பல ஆண்டுகளுககுப் பின், மறுபடியும் அந்த கடைக்கு போன அம்மா, அதன் வளர்ச்சியை பார்த்து மிரண்டுடாங்க. போன் பன்னி, போத்திஸ்லாம் என்னத்துக்கு, நம்ம கடை பிரம்மாண்டமாய், மிக பிரம்மாண்டமாய் மாறிடுச்சு.
இரண்டு பையனுக்கு இரண்டு பெரிய கடை, லிப்டு, அவ்ளோ சரக்குனு ரொம்ப நல்லா இருக்குனு சொல்லிட்டு, அவங்க பையனுக்கு கூட உன்ன கேட்டாங்க. நீ தான் ஐடி மாப்பிள கேட்டியே அதான் வேண்டாம்னுட்டேன்னு சொல்லிட்டு, வேறென்ன பெருமூச்சு தான்..
அவங்க கடைக்கு போன நாளன்னைக்கி, அந்த அம்மாவோட கள்ளமில்லா சிரிப்பும் வாஞ்சையும் இன்னமும் ஞாபகம் இருக்கு. அப்போ கேட்டிருந்தாளும், என் வேலை தான் முக்கியம்னு நோ தான் சொல்லியிருப்பேன்.ம்.. இருந்தாலும்.. நீ வந்தா போதும்; வந்தா மட்டும் போதும்னு நினைச்சவங்கள தொரத்திட்டு, கடைசியா வாக்கப்பட்டது,
infinite பொறாமை புடிச்ச, வஞ்சம் புடிச்ச மாமியாக்காரி கிட்ட.
மாமியார் அமைவதெல்லாம்...
Monday, April 7, 2025
Wednesday, April 2, 2025
Immaculate
நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட, காதலன் குழந்தை தான் காதலி
ஏன்செவ்விழி கலங்குது பூந்தென்றலில் கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பதும்
இந்த தாய் மனமே <3
-வாலி
Subscribe to:
Comments (Atom)
