Friday, March 28, 2025

Adventure starts here

சிறிய வயதிலிருந்து அடித்து பிடித்து விளையாடிய இரு வாண்டுகள் தொடர்ந்து பயனிக்கின்றனர். அவளுடைய கனவு  destination - Paradise Islands. அதன் கத்தரதித்த புகைப்படத்துடன் ஆரம்பமாகிறது அவளுடைய அட்வென்சர் ஜர்னல்.

இருவரும் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். உபரி பணம் சேரவும், அடுத்த செலவு வரவும்; வரவும் செலவுமாய் நாட்கள், வருடங்கள் பறக்கின்றன. ஒருநாள், அவள் நிறைவாக இறந்தும் போகிறாள். அவளை எங்கும் அழைத்து செல்ல முடியவில்லை என்ற விரக்தியோடு அவளுடைய ஜர்னலை புரட்டுகிறான் அவன். அதில் உள்ள நினைவுகளெல்லாம் இருவரின் அழகிய நாட்கள். Thanks for the adventure என்ற காதல் களஞ்சியத்தோடு முடிகிறது அவளுடைய Adventure book.

Its not the destination, 
Its the company
Its the journey
Its the love <3
That's life

Friday, March 21, 2025

Delulu


காலங்கள் போனால் என்ன
காதல் போகாதவரை ஒன்றும் குறையில்லை. நான் வாழந்துவிடுவேன்.

இது போதும் போதும்.

Thursday, March 20, 2025

Happiness a gift or talent

வாழ்க்கையில சந்தோசமா இருக்க என்ன தான் செய்யனும்? எப்பவும் எல்லோருக்கும் ஏதோ ஒரு குறை இருந்துட்டே தான் இருக்கும். Gratitude பயிற்சி தினமும் செய்தால், வாழ்க்கையில் நல்லதே எப்பவும் நடக்கும். சரி, பன்னிப்பாத்துடலாம்னு கண்ண மூடுனா வர்ர நினைவுகளெல்லாம் வாங்கன செருப்படிகள மட்டும் தான் நினைவுபடுத்துது. தியானப் பயிற்சி செய்து பார்கலாம்னு முயன்றா தூங்கிடுறேன். அடுத்து உடற்பயிற்சி, கண்டிப்பா எல்லோரும் செய்யனும். ம்ம்.. எங்க முடியுது.

கடைசில நான் கண்ட தீர்வு: நாம் எல்லோரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமை (அ) பெற்று வந்த பேறு உழைப்பு.  முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். அது மட்டும் தான் சந்தோசம், தூக்கம், நிம்மதி.

Tuesday, March 18, 2025

Bitch

மகனோடு அமர்ந்து ரீல்ஸ் தள்ளிக் கொண்டிருந்த போது, Bitch என்ற வார்த்தை குறுக்கே வந்தது. அப்படினா என்னனு தெரியுமானு அவன்கிட்ட கேட்டேன். நாய் என்றான் என் பப்பி.  நாய்ங்கறது ஏன் கெட்ட வார்த்தை ஆனது? நாய்களுக்கு வரைமுறை கிடையாது. பிடித்த நாய்களோடு சுத்தும். அதிலும் பாரு, male form of bitch இல்லை என்றேன். கடைசில, it's the bitch that suffers with for its kids & by people around.

நம்ம Scar, சொறி புடிச்ச வெள்ள நாய், belt போட்ட அழகான நாய், எறும்மமாட்டு நாய் கூடலாம் சுத்தியிருக்கு என்றான். அவன் listah கேட்டு அசந்துட்டேன்.

Monday, March 17, 2025

பிறவிப் பெருங்கடல்

யார் விழியில் யார் வரைந்த கனவோ, பாதியிலே கலைந்தால் தொடராதோ?

ஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ, காலமதை சிதைத்தும் மறக்காதோ?

வீழும் முன் அந்த கண்ணீர் துளி
கரையும் அந்த மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே
காயம் ஆறும் இந்த புன்னகைகள்

உரைக்கும் முன்னே காதல் ஒன்று
மரித்துப் போன சோகம் என்ன
பதிக்கும் முன்னே உதிர்ந்து போன முத்தம் ஏராளம்

பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கி கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்.

மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்